நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவில்லாமல் கடந்துகொண்டிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் மூன்று பேரால் கடத்தப்பட்டு மூன்று மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்ததாக தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் விஷ்ணுகுமார், மந்தோஷ் மற்றும் மனோஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று கூறினார். சிறுமி காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு, குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஏப்ரல் 20 அன்று காணாமல் போனவர் குறித்து புகார் அளித்ததாக பிரபல செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகாரை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மகள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்குமாறும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அந்தப் பெண் கடத்திச் செல்லப்பட்ட ஆட்டோ
வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்” என்று நகர டிஎஸ்பி குல்தீப் குமார் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்ய முயற்சித்து வருவதாக டிஎஸ்பி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பியபோது, குற்றம் சாட்டப்பட்ட மூவரால் சிறுமி கடத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஆட்டோரிக்ஷாவில் இழுத்துச் சென்று முகத்தில் துணியைக் கட்டியுள்ளனர்.
சிறுமி தெலிதிஹ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஒரு அறையில் அடைத்துவிட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் வாயில் துணியைக் கட்டியுள்ளனர்.
கடந்த ஜூலை 19-ம் தேதி பூட்டை உடைத்து தப்பிச் சென்ற சிறுமியை அக்கம்பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பின்னர், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். கடந்த ஜூலை 24 அன்று, சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் பொகாரோ மகளிர் காவல் நிலையத்தை அடைந்து இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். அந்தப் பெண் தற்போது தனது பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளார்.