சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை ஈடுபட்ட ஆசிரியருக்கு கேரள நீதிமன்றம் 56 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 


மாதா,பிதாவுக்கு அடுத்து நாம் குருவை தான் வணங்கி வருகிறோம். குருவாக விளங்கும் ஆசிரியர்களில் சிலர் செய்யும் தரக்குறைவான செயல்களால் அனைவருக்குமே கெட்ட பெயர் ஆகிவிடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் கேரளாவில் கடந்த 2020ல் நடந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தன்னுடைய வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். 


இவரிடம் 11 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அச்சிறுவனிடம் அப்துல் ஜப்பார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என அவர் மிரட்டியதால் சிறூவனும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளான். இப்படியான நிலையில் அப்துல் ஜப்பாரிடம் சிறுவனின் தம்பியையும் அரபி பாடம் கற்க அனுப்பி வைக்க அவனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்கு அந்த சிறுவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


என்ன காரணம் என பெற்றோர்கள் கேட்ட நிலையில் அப்துல் ஜப்பார் தன்னிடம் நடந்து கொண்டதையும், மிரட்டியதையும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக போத்தன்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனடிப்படையில் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் அப்துல் ஜப்பாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கானது போத்தன்கோடு விரைவி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, பாலியல் கொடுமை செய்து வந்தவருக்கு எந்தவித கருணையும் காட்ட தேவையில்லை என காட்டமாக கூறியதோடு, ஆசிரியர் அப்துல் ஜப்பாருக்கு 56 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: அதிர்ச்சி! 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இளம்பெண் போக்சோவில் கைதுஅதிர்ச்சி!