மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் ஜாமீனில் வெளிவந்து மயிலாடுதுறையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நீதிமன்ற உத்தரவுப்புடி பிடிவாரண்டில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.




கடந்த 2018 ஆம் ஆண்டு கோயமுத்தூர் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடைய கோயமுத்தூரை சேர்ந்த முகமது ஆசிக் என்ற நபர் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜாமீனில் வெளிவந்த முகம்மது ஆசிக் கோயம்புத்தூரில் இருந்து தப்பி மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள  கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு முகம்மது ஆசிக் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. இருந்தும் முகமது ஆசிக் ஆஜராகவில்லை. இதனையடுத்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. 



இதனைத் தொடர்ந்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் முகமது ஆசிக்கை தேடிவந்த நிலையில், அவர் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் உள்ள ஒரு கோழி இறைச்சி கடையில் தங்கி வேலைசெய்து வந்தது. தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து  நீடூர் சென்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள்  மயிலாடுதுறை காவல்துறை உதவியுடன் முகமது ஆசிக்கை கைதுசெய்து சென்னை அழைத்துச் சென்றனர்.