குஜராத் மாநிலம் சூரத் நகரம் வைரங்களுக்கு பட்டைத் தீட்டும் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை ,  தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு புகழ்பெற்ற நகரமான சூரத்தில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலீட்டார்கள் முதலீடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் (29) . இவர் ராணுவத்தில் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள கஞ்ச் மாவட்டத்தை  சேர்ந்த லங்கே ஹுஜெபா (21) என்பவரிடம் குஜராத்தில் உள்ள தங்க முதலீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். 



இந்நிலையில் ஜெபஸ்டின் ராஜ் குஜராத் மாநில இளைஞரிடம், பலமுறை முதலீடு செய்யப்பட்ட 20 லட்சத்தை தங்கமாகவும் அல்லது பணமாகவும் திருப்பி அளிக்கும்படி பலமுறை கேட்டு உள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பணத்தையோ அல்லது தங்கம் திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இராணுவ வீரர் ஜெபஸ்டின் ராஜ் இரு தினங்களுக்கு முன்பு தனது சகோதரர் ஜான் ஆரோக்கியசாமி (32), தனது நண்பர்களான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சன் (25) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது பட்டாணி (29) ஆகியோருடன் குஜராத் மாநிலம் கஞ்ச் மாவட்டத்திற்கு சென்று லங்கே ஹுஜெபா அவரிடம் பணத்தை திருப்பி அளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தைத் தர மறுத்ததாக கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த ஜெபஸ்டின் ராஜ்,  இளைஞரை காரில் கடத்திக் கொண்டு தமிழகம் திரும்பி உள்ளார். கடத்தப்பட்ட நபரின் சகோதரர் லங்கே கசாம் (27) கடத்தல் குறித்து குஜராத் மாநிலம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



கடத்தப்பட்ட நபர்களின் செல்போன் சிக்னல் வைத்து குஜராத் கிரைம் போலீசார், தமிழக காவலர்கள் உதவியுடன் தேடிவந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே காட்டியுள்ளது . இதனைத் தொடர்ந்து சுங்கா சத்திரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது பட்டாணி என்பவர் சுங்குவார் சத்திரத்தில் பிரியாணி கடை நடத்திவரும் தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. அப்பொழுது செல்போன் சிக்னல் வைத்து தேடிய பொழுது, கடத்தப்பட்ட இராணுவ வீரரின் செல்போன் என்னும் , முகமத் பட்டாணி செல்போன் என்னும் ஒரே பகுதியில் தென்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்குவார்சத்திரம் போலீசார் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது.



இதனைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது,  கடத்தப்பட்ட நபருடன் நான்கு நபர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் 5 நபர்களும் தப்பி வேலூர் மார்க்கமாக காரில் சென்றனர். தப்பி ஓடிய 4 நபர்களில் இருவரை, பாலுசெட்டி சத்திரம் அருகே கார் மூலம் போலீசார் துரத்தி பிடித்து. 



இதில் முக்கிய குற்றவாளியான ராணுவ வீரரின் அண்ணன் ஜான் ஆரோக்கியசாமி, கடத்தலுக்கு உதவி ஜான்சன் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியாக ராணுவ வீரர் ஜெபஸ்டின் ராஜ், உதவிய முகமது பட்டாணி இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.



இந்நிலையில், கடத்தப்பட்ட இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டு சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சினிமா பாணியில்  வட மாநிலத்தில் சென்று கடத்திக்கொண்டு வந்து மிரட்டி பணத்தை கேட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.