உயிரின சட்டத்தை மீறி பச்சை கிளிகளை மர கூண்டுகளில் அடைத்து வைத்து கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரை அதிரடியாக கைது செய்த திருப்போரூர் வனத்துறை அதிகாரிகள் 7 கிளிகளை சுதந்திரமாக பறக்க விட்டனர், மீண்டும் இதுபோன்ற செயல்படாதவாறு அபராதம் விதித்து அறிவுரை வழங்கி   அனுப்பினார்.



 

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வனத்துறையினருக்கு கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் செய்வதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் வனத்துணை அலுவலர் கல்யாண் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் மூன்று குழுவாகப் பிரிந்து   திருப்போரூர் முருகன் கோவில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், கோவளம் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டபோது மரப்பெட்டியில் அடக்கி வைக்கப்பட்ட கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்த ஏழு பேரை கைது செய்த  வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்தனர்.



அப்போது, அருகில் உள்ள காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில், மற்றும் மரங்களில் கூடு கட்டி வைத்திருக்கும் பச்சை கிளி குஞ்சுகளை பிடித்து  வளர்த்து வருவதாகவும் பின்னர் அது வளர்ந்த பிறகு  பச்சை கிளிகளை பறந்து செல்லாமல் இருக்க இறக்கைகளை வெட்டி மரப்பெட்டி கூண்டுகளில் அடைத்து வைத்து அவர்களுடன் பழக வைப்பதாகவும், நெல், சோளம், போன்ற தானியங்கள் கொடுத்து ஜோசியக்காரர்கள் சொல்லும் பேச்சை கேட்கும் அளவிற்கு பழகி கொண்டதாகவும் இதில் ஒரு சில கிளிகள் மனிதன் நாம் பேசும் ஒருசில வார்த்தைகளையும் கிளிகளை பேச வைத்துள்ளனர்.

 

அந்த கிளிகளை வைத்து கோயில் திருவிழா நேரங்கள், கடற்கரைப் பகுதிகளில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஜோசியம் பார்த்து வந்ததும் இதனால் கிளிகளை வைத்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது,



பின்னர் வனச்சரக அலுவலர் கல்யாண், தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் கிளைகளை துன்புறுத்தியதாக  ஜோசியக்காரர்கள் மீது வன உயிரின சட்டம் 1972 படி அவர்களிடம் 2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து இனி இது போன்று நடக்காமல் இருக்க அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர். இதில்  சுப்பிரமணியன், தங்கமாரி, வள்ளிநாயகம், மாரியப்பன், முப்புடாதி, குமார், பரமசிவன், ஆகிய 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி அதிரடியாக  நடவடிக்கை எடுத்துள்ளனர்.



மேலும் கிளிகளுக்கு ரக்கைகள் வெட்டப்பட்டதால் பறக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் இறக்கைகள் சிறிது வளர்ந்ததும் மரக்கூடுகளில் அடைத்து வைக்கப்பட்ட கிளிகளை சுதந்திரமாக இள்ளலூர் காப்பு காட்டில் வனத்துறையினர் இன்று பறக்க விட்டதில் கிளிகள் சுதந்திரமாக பறந்து சென்றது. இது போன்று இனி வரும் காலங்களில் கிளிகளை மரப்பெட்டியில் அடைத்து வைத்து துன்புறுத்தி வரும் நபர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை கைது செய்து சிறையில் வைக்கப்போவதாக வனத்துறை அலுவலர் கல்யாண் கூறியுள்ளார்.