மதுரை மாவட்டத்தில் 3 நாட்களாக 206 கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை. குட்கா விற்பனை 10 கடைகளின் உணவுப்பாதுகாப்புதுறை அனுமதி ரத்து - கடைக்கு தடை - உணவுப்பாதுகாப்புத்துறை.



தொடர்ந்து இதுபோன்று சட்ட விரோத விற்பனைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுத்து கைது செய்யப்படுவார்கள் எனவும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 


மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், பள்ளி கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 19 குழுக்களாக பிரிந்துசென்று கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பெட்டிகடைகள், பல சரக்கு கடைகள், சிறிய உணவகங்கள் என 206 கடைகளில் உணவுபாதுகாப்புத்துறையினர் நேரில் சோதனை நடத்தினர்.

 


கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் ’ - விமர்சையாக நடைப்பெற்ற கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!




 

இதில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 16 கடைகளுக்கு 1 லட்சத்தி 10ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்ததோடு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்று குட்கா விற்பனை செய்யப்பட்டதாக இரு முறைக்கு மேல் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட கடைகள் எச்சரிக்கையை மீறியும் குட்கா விற்பனை செய்த 10 கடைகளுக்கு  உணவுப்பாதுகாப்புத்துறை குழுவினர் நோட்டீஸ் வழங்கி உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்து அனுமதி சான்றுகளை ரத்து செய்யப்பட்டதோடு  கடைகளில் விற்பனைக்கான தடை விதித்து உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.



 

மாவட்ட முழுவதும் மதுரை மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்று சட்ட விரோத விற்பனைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுத்து கைது செய்யப்படுவார்கள் எனவும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.