870.1 கோடி ரூபாய்க்கு வங்கி வைப்பாளர்களை ஏமாற்றிய வழக்கில், பாசி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 171.74 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.


மோகன்ராஜ் மற்றும் கமலவல்லி ஆகிய தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் இருவருக்கும் இருபத்தேழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா 42.76 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக சிபிஐ செய்திக் குறிப்பில்தெரிவித்துள்ளது. Paazee Forex Trading India Private Limited, Paazee Trading Inc. மற்றும் Paazee Marketing Company ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு தலா 28.74 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


வைப்பாளர்களை 870.10 கோடி ரூபாய் (தோராயமாக) ஏமாற்றியது தொடர்பான இது போன்ற அரிய வழங்குகளில் இதுவும் ஒன்று என சிபிஐ தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 171.74 கோடி ரூபாயாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஜூன் 15, 2011 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.


திருப்பூரில் இயங்கி வரும் Paazee Marketing நிறுவனம், அதன் இயக்குனர் கே.மோகன்ராஜ் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் உள்பட பலர் ஜூலை 2008 முதல் செப்டம்பர் 2009 வரை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதிக வட்டி தருவதாக கூறி பல்வேறு வைப்புத்தொகையாளர்களிடம் இருந்து டெபாசிட் வசூலித்து 870.10 கோடி ரூபாயை (தோராயமாக) ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. 


மேலும், www.paazeemarketing.com என்ற இணையதளத்தின் மூலம் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள், பொதுமக்களால் செய்யப்படும் டெபாசிட்கள் மற்றும் முதலீடுகளை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் பயன்படுத்துவோம் என நேர்மையற்ற முறையில் உறுதியளித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


அவ்வாறு சேகரிக்கப்பட்ட வைப்புத்தொகைக்கு மிகக் குறுகிய காலத்தில் பெரும் ஈவுத்தொகை/வட்டி வழங்கப்படும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொய் வாக்குறுதி அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகளை வழங்கினர்.


அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் Paazee Forex Trading India Private Limited, Paazee Trading Inc. மற்றும் Paazee மார்கெட்டிங் கம்பெனியின் பெயர்களில் கணக்குகளைத் திறந்தனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அக்டோபர் 7, 2011 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களையும் மூன்று நிறுவனங்களையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கண்டறிந்து அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.