சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் ஐசிசி 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் இந்த குற்றச் சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக ESPNCricinfo தெரிவித்துள்ளது. "மோசடி செய்பவர்கள் நிதி மோசடி செய்ய பயன்படுத்திய வழி வணிக மின்னஞ்சலை (BEC) மின்னஞ்சல் கணக்கு சமரசம் என்றும் அழைக்கப்படுகிறது.  இது ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமைப்பின் கூற்றுப்படி, அதிகப்படியான நிதி மோசடி நடைபெறும் குற்றங்களில் ஆன்லைன் குற்றங்கள் ஒன்றாகும். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் வெளியுலகத்திற்கு தெரிவிக்காத ஐசிசி, அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.


"ஐ.சி.சி கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவதற்கு மோசடி செய்தவர்கள் எந்த வழியில் பணத்தினை மோசடி செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.  அவர்கள் துபாயில் உள்ள தலைமை அலுவலகத்தில் யாரையாவது நேரடியாக தொடர்பு கொண்டார்களா அல்லது ஐசிசி விற்பனையாளர் அல்லது ஆலோசகரை குறிவைத்து மிரட்டி அதன் மூலம் பணத்தினை எடுத்தார்களா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.


"பரிவர்த்தனை ஒரே கட்டணத்தில் செய்யப்பட்டதா அல்லது பலமுறை பரிமாற்றங்கள் இருந்ததா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை." ஃபிஷிங் என்பது, இலக்கு வைக்கப்பட்ட நபர்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெற, பொதுவாக மின்னஞ்சல் வழியாக, சட்டபூர்வமான நிறுவனங்களாகக் காட்டிக் கொள்ளும் சைபர் குற்றவாளிகளின் முயற்சியாகும். இது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான மோசடிகளில் ஒன்றாகும்.  BEC மோசடி என்பது ஃபிஷிங்கின் ஒரு வடிவமாகும், அங்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஏமாற்றப்பட்டு பணப் பரிமாற்றங்களைச் செய்ய வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐசிசி பறிகொடுத்த பணத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 20 கோடிக்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.