லிவிங் உறவில் தன்னோடு வாழும் பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டிய வழக்கில், மனோஜ் ரமேஷ் சானே எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கொன்று துண்டு துண்டாக வெட்டிய 32 வயது பெண்ணுடன் ஒருபோதும் உடல் ரீதியான உறவை கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். கொல்லப்பட்ட சரஸ்வதி வைத்யா, "தனது மகள் போன்றவர்" என்று அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.


மும்பையில் நடந்த சம்பவம் 


குற்றம் நடந்ததாக கூறப்படும் மீரா ரோடு குடியிருப்பில் போலீசார் நுழைந்தபோது, ரத்தக்கறை படிந்த சமையலறையில் வெந்நீரில் மனித சதைத் துண்டுகள் இருப்பதைக் கண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் பிரஷர் குக்கரில் உடல் பாகங்களை வேகவைத்து தெரு நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். அந்த நபர் தன்னோடு வாழ்ந்து வந்த சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, கைதுக்கு பயந்து, உடலை வெட்டி வீச முடிவு செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீதான புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். 



எச்.ஐ.வி. நோய் பாதிக்கபட்டவர்?


சமீபத்திய தகவல்களின்படி, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, "முதற்கட்ட விசாரணையின் போது, 2008 ஆம் ஆண்டில் அவர் எச்ஐவி பாசிட்டிவ் என்று கண்டுபிடித்ததாக சானே போலீசாரிடம் கூறினார். அப்போதிருந்து, அவர் மருந்து உட்கொண்டு வருவதாகவும் கூறுகிறார். நீண்ட நாட்களுக்கு முன்பு, விபத்தில் சிக்கிய போது, அதற்கான சிகிச்சையின் போது எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தத்தைப் பயன்படுத்தியதால்தான் நோய் தாக்கியதாக அவர் சந்தேகிக்கிறார். எச்.ஐ.வி. நோய் பாதிக்கபட்டிருப்பதால் அவர்கள் இருவரும் ஒருபோதும் உடலுறவு கொண்டதே இல்லை என்றும் அவர் தனது மகள் போன்றவர் என்றும் கூறுகிறார். அவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவதால், அவரை சோதனை செய்யும் அதே வேளையில், போலிசார் சரஸ்வதியும் அதனால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்று சோதனை செய்ய உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: TNPL: டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா 7-வது சீசன், வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது... சேலத்தில் 10 போட்டிகள்..


10 வகுப்பு தேர்வுக்கு தயாரானோம்!


சானே, பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சரஸ்வதி இயற்கையில் மிகவும் பொஸசிவானவர் என்றும், தாமதமாக வீடு திரும்பும் போதெல்லாம் அவர் தன்னை சந்தேகித்தார் என்றும் அந்த அதிகாரி மேற்கோள் காட்டினார். 32 வயதான பெண் 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்சி தேர்வுகள் எழுத திட்டமிட்டிருப்பதாகவும், சானே அவருக்கு கணிதம் கற்பிப்பதாகவும் சானே கூறியதாக அதிகாரி மேலும் கூறினார். ஏழாவது மாடி குடியிருப்பின் சுவர்களில், கணித சமன்பாடுகள் எழுதப்பட்ட பலகையை போலீசார் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



தற்கொலை செய்துகொண்டாரா?


வைத்யா தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்று சானே பொலிஸிடம் கூறியுள்ளார். அந்தக் கூற்றைப் பற்றி மேலும் விரிவாகக் கூறிய மூத்த அதிகாரி, ஜூன் 3, அன்று காலை, வீடு திரும்பும்போது, மும்பையில் உள்ள மீரா ரோடு, கீதா நகர் பகுதியில் உள்ள அவர்களது குடியிருப்பில் சரஸ்வதி தரையில் படுத்திருப்பதை குற்றம் சாட்டப்பட்ட சானே பார்த்ததாக கூறினார் என்றார். "அப்போது, அவருடைய நாடித்துடிப்பைச் சரிபார்த்தபோது அவர் இறந்துவிட்டார். என் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என பயந்து, சானே உடலை அகற்ற முடிவு செய்தார்," என்று மூத்த அதிகாரி சானேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டினார். மேலும் பேசிய அவர் கொலைக் குற்றத்திற்கு பயந்து அவர் பொய் கூறி வருவதாகவும், அவரே கொலை செய்திருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.