தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இராயப்பன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார் இவர் அப்பகுதியில் கட்டிட வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மனைவியான ரஞ்சிதா வயது 29 கடந்த 8 வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி தற்போது இவர்களுக்கு 8 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் ரஞ்சிதா இறந்ததாக கூறி நேற்று முன்தினம் அங்குள்ள மயானத்தில் எரித்துக் கொண்டிருந்தபோது போலீசார் கிடைத்த தகவலையடுத்து மயானத்திற்கு விரைந்த போலீசார் எரிந்துகொண்டிருந்த ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் உடலை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்தபோது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ரஞ்சிதாவின் கணவர் மற்றும் அவரது தாயார் அவரது நண்பர் உட்பட 4 பேர் மீது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ரஞ்சிதா ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில் ரஞ்சிதாவை பலமுறை எச்சரித்தும் திருந்துமாறு கூறியும் மீண்டும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்த நிலையில்,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா மீண்டும் தகாத உறவில் ஈடுபட, அவரிடம் சென்று வீடு திரும்பாத நிலையில் அவரை மீட்டு தர ராயப்பன்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் ராயப்பன்பட்டி போலிசார் ரஞ்சிதாவை மீட்டு, நேற்று முன்தினம் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறினார். வீட்டிற்கு வந்த ரஞ்சிதாவிடம் நானும் எனது தாயும் அவரிடம் தகாத உறவு வேண்டாம் என கூறியபோது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ரஞ்சிதாவை கொன்றுவிட முடிவு செய்ததாகவும் ரஞ்சிதாவின் கழுத்தை சேலையால் இறுக்கி கொன்றதாகவும் அவருடைய கால்களை தனது அம்மா கவிதா இறுக்கமாக பிடித்துக் கொண்டதாகவும் ரஞ்சிதா துடிதுடித்து இறந்ததாகவும் கூறினார்.
இறந்த பின்பு ரஞ்சிதாவின் உடலை எரிப்பதற்கு தனது நண்பர் உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். ரஞ்சிதா இறந்த தகவலையறிந்த போலீசார் ரஞ்சிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அறிக்கையின் முடிவில் ரஞ்சிதா கொலை செய்தது தெரியவந்ததும் போலீசார் தங்களை கைது செய்துவிட்டதாக ரஞ்சிதாவின் கணவர் கல்யாணகுமார் போலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். தகாத உறவை கைவிடாததால் தாயும் கணவரும் சேர்ந்து பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.