விழுப்புரம் : விழுப்புரத்தில் மின் ஊழியர் வீட்டில் பின்பக்க ஜன்னல் கம்பியை  உடைத்து வீட்டில் பீரோவில் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்களை கொள்ளை.


விழுப்புரம் சாலாமேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், இவர் விழுப்புரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிக்கொண்டு மதுரையில் உள்ள குடும்பத்தோடு மதுரையில் உள்ள குலதெய்வம் வழிபட்டு விட்டு பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் உள்ளே திறந்து பார்த்த போது, வீட்டின் பின் பக்க சன்னல் கம்பியை உடைத்து நீக்கிவிட்டு  வீட்டில் 3 அறைகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு  மூன்று  பீரோவை  உடைத்து பொருள்கள் வெளியில் சிதறி  கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் பிரோவில் வைக்கப்பட்டிருந்த  50  பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருள்கள் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து குறித்து சம்பவ இடத்தில் விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா மற்றும் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் மோப்ப நாய் , கைரேகை நிபுணர் வரவழிக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.


கண்காணிப்பு கேமராக்கள்


விழுப்புரம் நகரில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நகரில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்வ தற்காகவும் மற்றும் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் நகரம் வழியாக வெளியூர்களுக்கு மதுபானங்கள் கடத்துவதை தடுக்கவும், தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 'மூன்றாவது கண்' திட்டத்தின் மூலம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், நான்கு முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, நேருஜி சாலை, பழைய பஸ் நிலையம், வீரவாழியம்மன் கோவில் சந்திப்பு, காந்தி சிலை, ரெயில்வே மேம்பாலம், காமராஜர் சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி சாலை, சென்னை நெடுஞ் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் தனியார் பங்களிப்புடன் காவல்துறை சார்பில் 58 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.


ஆனால் தற்போதைய நிலவரமோ, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை. நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் பெயரளவில் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது. அவை பழுதடைந்துள்ளதால் செயல்பாட்டில் இல்லை. அந்த கேமராக்களின் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தபடியும், கேமராக்கள் பூமியை பார்த்தபடியும் உள்ளன. இதுபோன்ற கேமராக்களால் காவல்துறைக்கு எந்தவித பயனும் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு குற்றச் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். நகரில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஏற்கனவே பொருத்தப்பட்ட கேமராக்களை அவ்வப்போது முறையாக பராமரிப்பதிலும் போலீஸ் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும். முறையாக பராமரிக்காததால் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பயனற்று இருக்கிறது. இதனால் தான் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்களும் தலைதூக்கி வருவதாக நகர மக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.