ஓசூரில் உள்ள பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் (தொழில்நுட்ப கல்வி பிரிவு) சி.என்.ஷோபானாவின் இல்லத்தில் இருந்து ரூ.2.06 கோடி ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 11 வங்கியில் இருந்து 38 சவரன் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரைச் சேர்ந்த அவரது அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கான கட்டிடத்தை அங்கீகரிப்பதில் எட்டு மாவட்டங்களுக்கு பொறுப்பானவர் அவர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement


 






TN Schools Holiday: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!


400 ஆண்டு பழமையான சிலை பறிமுதல்


இதேபோல், காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் இருந்து விநாயகர் நடனமாடும் வடிவத்தில் இருக்கும் ரித்திய விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய முயன்ற 130 கிலோ எடையும், 5.25 அடி உயரமும் கொண்ட சிலை பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 


 






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண