கர்நாடகாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்தோர் மீது சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி ஏறியதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் கொப்பால் மாவட்டம் முனீராபாத்தில் உள்ள ஹூலிகம்மா கோயில் அருகே நடந்தது. இந்த விபத்து நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி காண்போரை பதறவைக்கிறது.
வீடியோவைக் காண:
மறக்க முடியாது விபத்தும் வழக்கும்:
2002ஆம் ஆண்டின் போது மும்பையில் பாந்த்ராவில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், நடிகர் சல்மான் கான் குற்றவாளி என கடந்த 2015ம் ஆண்டு மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்திருந்தது. இதையடுத்து சல்மான் தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
வேதனையை பிரதிபலித்த திரைப்படம்:
சல்மான் கானின் கார் விபத்து சம்பவத்தை ஒட்டி தமிழில் வெளியான திரைப்படம் மனிதன். 2016 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை எல். அகம்மது இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் நடிகர்களாக உதயநிதி ஸ்டாலின், ராதா ரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2013 இல் இந்திமொழியில் வெளியான சுபாஷ் கபுரின் "ஜாலி எல்எல்பீ" படத்தினை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் டெல்லி ஹிட் அன்ட் ரன் வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஏப்ரல் 29, 2016 இல் வெளிவந்தது. இதனைத் தழுவிவந்த மனிதன் படம் உதயநிதியை ஒரு நடிகராக கவனிக்க வைத்தது. அந்தப் படத்தில் கோர்ட் சீனில் ஒரு வசனம் வரும். அப்போது, ப்ளாட்பாரம் ஒன்னும் பெட்ரூம் இல்ல”ன்னு பிரகாஷ்ராஜ் சொல்லும் வாதாடுவார், அதற்கு உதயநிதி “அப்போ பிளாட்ஃபாரத்துல வண்டி ஓட்டலாமா”ன்னு உதயநிதி கேட்பார். படம் முழுவதும் தெறிக்கவிடும் வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அஜயன் பாலா வசனத்துக்காகவே கவனிக்கப்பட்டார்.
இந்தியாவும் ஹிட் அண்ட் ரன் விபத்துகளும்:
இந்தியாவில் சாலை விபத்துகளில் நாள்தோறும் சராசரியாக 328 பேர் பலியாகின்றனர். கரோனா பரவலால் 2020-ம் ஆண்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவிக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட (என்சிஆர்பி) அறிக்கையில், ''கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் இருந்தபோதிலும்கூட சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், சராசரியாக நாள்தோறும் 328 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹிட் அண்ட் ரன் வகையறா விபத்துகள் அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.