ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது குர்கான். இங்குள்ள பள்ளி ஒன்றில் 17 வயது சிறுவர்கள் இருவர் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலை அவர்களில் ஒரு சிறுவன் தன்னுடைய சக வகுப்பு நண்பனை பார்த்து வருவதாக கூறிச்சென்றுள்ளான்.


ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த சிறுவனை காணாததால் அவனது தந்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுவனின் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால், அந்த சிறுவனின் தந்தை காத்திருந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு வராததாலும், அவனது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்ததாலும் அவர் பதற்றமடைந்துள்ளார்.




பின்னர், அவரது மகன் காணச்சென்ற நண்பனின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவர்களது மகன் ஏற்கனவே தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பிவிட்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளான். மேலும், அந்த சிறுவன் காணாமல் போன சிறுவனை அவனது மாமா வீட்டு அருகே விட்டுவிட்டுச் சென்றதாக கூறியுள்ளான்.


ஆனால், கிராமத்தில் விசாரித்தபோது இருவரும் ஒன்றாக இணைந்து மோட்டார் சைக்கிளில் சுற்றியது தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் இணைந்து சுற்றியதாக கூறப்பட்ட நேரமும், அந்த சிறுவன் கூறிய நேரமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்துள்ளது. இதையடுத்து, சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாயமாகிய சிறுவனின் தந்தை சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனை தேடியுள்ளனர்.


கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் இருவரும் இணைந்து சுற்றியதாக கூறப்பட்ட பகுதியில் மாயமாகிய சிறுவனைத் தேடியுள்ளனர். அங்கு ஆள் நடமாட்டமின்றி தனியாக இருந்த இடத்தில் தேடிப்பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் மாயமாகியதாக கூறப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளான்.




இதையடுத்து, உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிறுவனுடன் கடைசியாக சுற்றிய அவனது நண்பனையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் மாயமாகிய சிறுவனை நண்பன் என்றும் பாராமல் 17 வயது சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது. உயிரிழந்த சிறுவனை தலையில் கல்லால் தாக்கி அவனது நண்பன் கொலை செய்துள்ளான். இதையடுத்து, அவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


இருவரும் ஒரே பள்ளியில் பல ஆண்டுகளாக ஒன்றாக படித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காரணமாகவே அந்த சிறுவனை மற்றொரு சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் வேறு யாரேனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கொலை செய்த சிறுவன் மீது கொலைப்பிரிவு 302, பிரிவு 34-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண