கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காக மது பாட்டில்கள், மற்றும் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் அருகே ஆரோவில் போலீஸ் சரகத்திற்க்கு உட்பட்ட கலைவாணர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


Palanivel thiagarajan: வம்பிழுத்த அதிகாரிகள்! கோபப்பட்ட பிடிஆர்! விமானநிலையத்தில் நடந்தது என்ன?




 


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர் பாபு, அன்பரசன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர். அப்போது அந்த குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்தனர். மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Kirthiga Udhayanidhi: அரசியலா!ஆளவிடுங்க..நழுவிய கிருத்திகா உதயநிதி


தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் குடோனில் இருந்து ரூ 3.20 லட்சம் ரொக்கப் பணம் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கிருந்து தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுவை மாநிலம் சின்ன சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த மோகன்லால் (வயது 23), தென்னார் சாலை பகுதியைச் சேர்ந்த மகேந்தர் (36) மற்றும் பெங்களூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் (30) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


 




 


இவர்கள் இந்த குட்கா பொருட்களை பெங்களூரு பகுதியில் இருந்து புதுவை மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இவர்கள் இந்த பொருட்களை உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய இருந்ததாக தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுவதால் விழுப்புரம் மாவட்ட எல்லையான 9 இடங்களில் மதுபான கடத்தலை தடுக்கும் விதமாக சுழற்சி முறையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இப்பணியில் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 65 போலீசார் மற்றும் 5 தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், மதுபாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தாலும், மதுபானங்களை கடத்தினாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் 590 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதால் அதனை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 


MK Stalin: ஏன் Fan ஓடல? எங்க பொரியல்? விடுதியில் ’வாத்தி ரெய்டு’ விட்ட CM


TN Weather Update: நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்?