விடிந்தா வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் பண்ருட்டி அருகே காதல் கணவரின் வீட்டு முன்பு கட்டிய தாலியுடன் பட்டதாரி பெண் இரவு முழுக்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சுப்ரமணியன் (31). மெக்கானிக் வேலை செய்து வருகிறார். பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) பட்டதாரி பெண்.
மெக்கானிக் சுப்பிரமணியன், ரம்யா இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், மேலும் இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர்,
இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த 22ஆம் தேதி விழுப்புத்தில் உள்ள கோவிலில் வைத்து ரம்யாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில் இருந்துள்ளனர்.
இதனிடையே கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சுப்ரமணியனுக்கு நிச்சயம் செய்யப்பட்டு இன்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடக்க இருந்ததை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ரம்யா இரவு முழுக்க காதல் கணவன வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காதலித்து திருமணம் செய்த பெண்ணை, ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் விடிய விடிய காதல் கணவர் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் கட்டிய தாலியுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்