தமிழ்நாட்டை உலுக்கிய கொடூரம்.. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அரசு அதிகாரி..

காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சிறுவனை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். அரசு ஊழியரான ராஜேஷ் காஞ்சிபுரம் நில அளவை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பரந்தூர் விமான நிலையம், திட்டம் நில அளவையில் பணியாற்றி வருகிறார். ராஜேஷுக்கு திருமணமாகிய நிலையில் மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார். அதே கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு பத்து வயதில் பெண் குழந்தையும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வசித்து வந்துள்ளார் ‌

Continues below advertisement

திருமணத்தை தாண்டிய உறவு

கருக்குப்பேட்டை பகுதியில் செல்வியின் (பெயர் மாற்றம்) தாய் சிறிய டிபன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். செல்விக்கு வேலை இல்லாததால் தனது தாய் நடத்தும் டிபன் கடையில் உதவி செய்து வந்துள்ளார். மனைவியைப் பிரிந்து ராஜேஷ் வாழ்ந்து வருவதால் அவ்வப்போது, செல்வி தாய் நடத்தும் டிபன் கடைக்கு சென்று டிபன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இந்தநிலையில் செல்வி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நட்பாக மாறியுள்ளது. செல்போன் மூலம் தங்களுடைய நட்பை ராஜேஷ் மற்றும் செல்வி ஆகியோர் வளர்த்து வந்துள்ளனர். நட்பு காலப்போக்கில் தகாத உறவாக மாறி உள்ளது. அவ்வப்போது ராஜேஷ் செல்வியை சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

வீட்டிற்கே சென்று வந்த ராஜேஷ்

தொடர்ந்து நில அளவை துறையில் தற்காலிக வேலை குறித்த அறிவிப்பு வந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராஜேஷ் செல்விக்கு, நில அளவை துறையில் தற்காலிக வேலையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவர்களுடைய தகாத உறவு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. ராஜேஷ் செல்வி வீட்டிற்கு சென்று வருவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. 

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

அவ்வாறு செல்லும்போது ராஜேஷ், செல்வி மகனிடம் தகாத முறையில் நடந்துள்ளார். தொடர்ந்து அவ்வப்போது செல்வி வீட்டில் இல்லாத போது, இதுபோன்று அந்த சிறுவனிடம் தகாத முறையில் நடந்துள்ளார். சம்பவத்தன்று சிறுவனிடம் தகாத முறையில் நடந்து , இதை வெளியில் சொல்ல கூடாது என சிறுவனை தாக்கியுள்ளார். சிறுவனை தாக்கி விட்டு அங்கிருந்து, ராஜேஷ் தப்பி சென்றுள்ளார். குழந்தைக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்த தாய் செல்வி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றது தெரிய வந்தது.

செல்போனில் ஆபாச படங்கள்

இந்தநிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணையை தொடங்கினர். செல்வி பெண் குழந்தையிடம் விசாரித்தபோது, அவ்வப்போது ஆபாச படங்களை சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவருக்கும் ராஜேஷ் காண்பித்து பாலியல் தொல்லை தந்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்கு மற்றும் போச்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து சிறுவனை கொலை செய்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola