விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1100 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 12ஆம் வகுப்பு மட்டும் 120 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.




இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக நந்தகோபால் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே நேற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் சாதாரண தேர்வு எழுத வைத்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தகோபால் மூங்கில் பிரம்பை எடுத்து 72 மாணவர்களையும் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் மாணவர்களுக்கு முதுகு பகுதி, கை பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Kallakurichi Incident: நல்லடக்கம் செய்ய உடலை பெற்றுக் கொள்ளுங்கள் - மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்




இதனை அடுத்து இன்று 25க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் கணபதியிடம் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த செஞ்சி  போலீசாரிடம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது என  கேள்வி எழுப்பினார்கள்.


இதனையடுத்து செஞ்சி வட்டாட்சியர் நெகருன்னிசா பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்த நிலையில், பள்ளியில் இருந்த இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் தலைமறைவானார். இதுகுறித்து பேசிய பெற்றோர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நேரில்  விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் படிக்க: Air India: எல்லாமே சொதப்பல்.. ஏர் இந்தியா மீது 3 மாதத்தில் 1,000 புகார்கள்.! பதிலளித்த மத்திய அரசு.!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண