கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்துறையினரிடம் சமீபத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றும் கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய ரகசிய வேட்டையில கோட்டயம், கருகச்சால் என்ற இடத்தில் 6 பேரை பேரை கைது செய்தனர். அவர்கள் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தகவல் கிடைத்தது.
இந்தக் கும்பல் மெசஞ்சர், டெலிகிராம் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் உறுப்பினர்களை சேர்த்து, ‘கப்பிள் மீட் அப் கேரளா' என்ற பெயரில் உள்ள ஒரு குரூப்பில் கேரளா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் என்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து, இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கணவனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்த 26 வயது இளம்பெண் கோட்டயம் அருகே கருகச்சாலை சேர்ந்தவர் என்றும், அவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் திருமணமும் நடந்துள்ளது.
32 வயதான கணவனின் கட்டாயத்தின் பேரில் தான் இளம்பெண், மனைவிகளை கைமாற்றும் கும்பல் பயன்படுத்தும் சமூக இணையதள குரூப்பில் சேர்ந்து உள்ளார். கடந்த சில வருடமாக கணவனின் கட்டாயத்தின் பேரில் வேறு சிலருடன் உறவும் கொண்டுள்ளார்.
இந்த கொடுமைதாங்க முடியாமல் தான் இளம்பெண் காவல்துறையில் புகார் கொடுத்து உள்ளார். தன்னுடைய கணவர் பணத்திற்காகவும், மற்ற பெண்களுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்ற மோசமான ஆசையிலும் தான் இந்த குரூப்பை பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார்.
இந்த குரூப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் யாராவது ஒருவது வீட்டில் குடும்ப நண்பர்களை போல, குறைந்தது 3 முறையாவது இது போன்ற சந்திந்து ஒருவரையொருவர் பழகிய பிறகு உறவு கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து மனைவியை மாற்றி கொண்டதாகவும் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஓட்டடலில் சந்திப்பது பாதுகாப்பு இல்லை என்பதால், குரூப்பில் உள்ள யாராவது ஒருவர் வீட்டில் தான் கூடுவார்கள் என்றும், பின்னர் ஒருவருக்கொருவர் மனைவிகளை கைமாற்றி கொண்டு உல்லாச உறவில் ஈடுபடுகின்றனர். மேலும், அவர்கள் டெலிகிராம். மெசஞ்சர்களில் போலி ஐடிகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
இந்த கும்பலில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த 25 பேரை ரகசியமாக கண்காணித்து வருவதாக காவல்துறை சார்பில் தெரிவித்தனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்