விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் எதிரே திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டு பட்டாசு வெடித்தனர். இதை பார்த்த உதவி காவல் ஆய்வாளர் டார்ஜான் (55) அவர்களிடம் சென்று போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்குமாறும், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் எச்சரித்தார்.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை வாங்கி சுவைக்கும் கடலூர் குள்ளஞ்சாவடி இனிப்பு வகைகள்...!
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் திடீரென பட்டாசை கொளுத்தி உதவி காவல் ஆய்வாளர் டார்ஜான் மீது வீசினார். இதில் சுதாரித்துக் கொண்ட டார்ஜான் சற்று விலகி கொண்டதோடு, பட்டாசை வீசிய நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் டார்ஜானை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், உதவி காவல் ஆய்வாளர் புனிதவல்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டனர்.
Mayiladuthurai: எனக்கு விடுப்பு கொடுத்துருங்க! திமுகவினரால் கடிதம் எழுதிய அதிகாரி
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அரகண்டநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ஆகாஷ் (19), சரவணன் மகன் விக்னேஷ் (27), கலியன் மகன் சோமு (35), வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் ஷானவாஸ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியது அரகண்ட நல்லூர் மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிதரன் (25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விக்னேஷ், ஆகாஷ், சோமு, ஷானவாஸ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிதரனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலையில் கல்லைப்போட்டு இளைஞரை கொன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்