திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம் (43). இவருக்குத் திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணை செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார். வாணியம்பாடி நகரமன்ற முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில்  செப்டம்பர் 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் .

 

கொலை செய்யப்பட்ட கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை  ஆய்வு செய்து போலீசார் இந்த வழக்கைத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் அன்றிரவே கூலிப்படையைச் சேர்ந்த ரவி (23) தில்லி குமார் (25), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா வியாபாரி டீல் இம்தீயாஸ் குறித்து காவல்துறைக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்ததால் கொலை செய்தது தெரிந்தது.

 

மேலும் காவல்துறையால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டம், மணிவாசகத்தை சேர்ந்த அகஸ்டின் (19), சத்தியசீலன் (20), வண்டலூர்  ஓட்டேரியைச் சேர்ந்த பிரவீன்குமார் (20), முனீஸ்வரன் (20), செல்வகுமார் (21), ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய் (21), ஆகியோர் நேற்று முன்தினம் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்களை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல் முக்கிய குற்றவாளியான  டீல் இம்தியாஸ் நேற்று சிவகாசி ஜேஎம் ஒன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் .

 

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜனுக்குக் கிடைத்த  ரகசியத் தகவலின் பேரில் நேற்று வாணியம்பாடி ஜீவா நகரில் பதுங்கியிருந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள்  அவர்கள் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த  பைசல் (25) , நேதாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்த முஹம்மத் அலி (19), ஜீவா நகர் பகுதியை சேர்ந்த  தமீம் என்கிற நமீம் (28), முஸ்லீம் பூரை சேர்ந்த  ஜமால் (22) என்பதும், இவர்கள் வசீம் அக்ரமை  கொலை செய்த  கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கொலைக்கான அரிவாள்களை வாங்கி வந்து சாணை பிடித்து தயாராக வைத்திருக்க உதவியதும் தெரியவந்தது. வாணியம்பாடி போலீசார் மேற்கண்ட நான்கு பேரை இன்று கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .