தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய  விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ், 20, தசரதன்,20. இவர்கள் இருவரும்  வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் வழக்கம் போல இருவரும் பைக்கில் வாலாஜாபாத்தில் இருந்து மண்ணிவாக்கம் நோக்கி வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். 





மணிமங்கலம் சோதனை சாவடி  அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சாலை விபத்தால் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் வாலாஜாபாத் பகுதியை ஜானகிராமன் (34) என்பவரை கைது செய்த தாம்பரம் போக்குவரத்து புலானாய்வு  போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 

மதுராந்தகம் வடக்கு புறவழி சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்தில் இருவர் பலி 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு புறவழி சாலையில் எதிர் திசையில் மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பாண்டிச்சேரியில் இருந்து, சென்னை நோக்கிச் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தண்டலம் பகுதியை சேர்ந்த வேலு மற்றும் மதுரை ஆகிய இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து  மதுராந்தகம் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வப்பொழுது இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதாக பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். இது போக தாம்பரத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்து இருக்கும் சம்பவம் தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண