அண்டை வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவர் சுப்பையா கைது செய்யப்படுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் சுப்பையா கைது செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆதம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்துவரும் டாக்டர் சுப்பையா, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆதம்பாக்கம் போலீசார் டாக்டர் சுப்பையாவை கைது செய்துள்ளனர்.
ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்ததாக கீழ்ப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறை தலைவரான டாக்டர் சுப்பையா ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் பிரிவில் தலைவராக பணியாற்றி வருகிறார். அரசு பணியில் இருந்து கொண்டு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தவர்களுக்கு இவர் உதவியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது மருத்துவ கல்வி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்