தாம்பரம் அருகே மீன் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவரின் மனைவி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (52). இவருடைய மனைவி ஜனகா. இருவரும் சேர்ந்து வண்டலூர் அடுத்த ஓட்டேரி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மீன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காரில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனகா ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

 

இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஜனகா படுகாயமடைந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக படுகாயம் அடைந்த ஜனகா மற்றும் பார்த்திபன் உடலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்தி வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் பார்த்திபனின்  15 வயது மகளுக்கு, மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமாரை செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், கடந்த டிசம்பர் மாதம் பார்த்திபனின் மகள் பிரேம்குமாரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் வைத்து கொலை  செய்ததால்  பழிக்கு பழியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண