சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்புராம் (87),காமாட்சி (84) தம்பதி. இவர்களுக்கு மகன் பரமராஜ் வயது (48) மகள் பாரதி (41) என இரு பிள்ளைகள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பரமராஜ் தாய் தந்தை இருவரையும் சித்திரவதை செய்து வந்துள்ளார். இதையடுத்து தம்பதி இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகரில் உள்ள மகள் பாரதி வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தார்.


இந்த நிலையில் பாரதி மற்றும் அவரது கணவர் குரோம்பேட்டைக்கு சென்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் அறை நீண்ட நேரம் நேரம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து உடனடியாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வயதான தம்பதி இருவருக்கும் சர்க்கரை வியாதி பிபி போன்ற நோய்வாய் பட்டு இருந்ததாகவும், பெற்ற மகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியான கவனிப்பு இல்லாததால் அவதிப்பட்டு வந்த நிலையில் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)