கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அடுத்துள்ள மேல்நோக்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி வயது (41) இவரது மகன் லோகேஷ்  (25) இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் இரண்டு மனைவிகள் அடுத்தடுத்து லேகேஷிடமிருந்து பிரிந்து சென்றனர். மூன்றாவதாக லோகேஷ் கிருஷ்ணகிரி அருகேயுள்ள அமனேரி கிராமத்தை சேர்ந்த கொடியா வயது (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


லோகேஷ்   மதுப்பழக்கத்திற்க்கு அடிமை ஆனதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகறாரில் லோகேஷின் மூன்றாவது மனைவி கொடியாவும் அவரிடம் சண்டை போட்டு விட்டு  தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து லோகேஷ் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். லோகேஷுடன் வர மூன்றாவது மனைவி கொடியா வர மறுத்ததால் மனமுடைந்தார்.




 


இதனிடையே 3 மனைவிகளும் அடுத்தடுத்து லோகேஷை பிரிந்து சென்றதால் லோகேஷற்கும் அவரது தந்தைக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை ராஜி லோகேஷிக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ராஜி தனது மகனின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று எரித்துள்ளார். 


லோகேஷ் காணமல் போனதால்  கிராம பொதுமக்களுக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இராயக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  விரைந்து வந்து காவல்துறையினர் இராயக்கோட்டை கிராமத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். 



 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


விசாரணையில் தந்தை ராஜி தனது மகன் லோகேஷிற்கு மதுபானத்தில் பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜி தலைமைறவானார் அவரை காவல்துறையினர் தேடி வந்தநிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சூளகுண்டா கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேலிடம் சரணடைந்தார். 


இதனையடுத்து அவர் ராஜியை இராயக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்து ராஜிவை கைது செய்தனர். தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு  சேலம் சிறையில் அடைத்தனர். தந்தையே மகனைக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 


Shershaah Movie: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பாலிவுட் படத்தின் ’ரியல் லைஃப் ஷெர்ஷா’ யார்?