சமூக வலைதளங்களில் தற்போது பெண்கள் ஆண்கள் என அனைவரும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டுமென பல விதமான பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அதே சமயம் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு மோசடிகள் நடக்கிறது. ஆகையால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சிலர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை பதிவு செய்வது மற்றவர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய், வயது.26, என்பவர், இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது, கடந்த 04.12.23-ஆம் தேதி சமூகவலைதளமான YouTube மற்றும் Instagram -வை பார்த்துக் கொண்டு இருந்த போது inba's track என்ற பெயரில் @inba's track - என்ற id -யை பயன்படுத்தி இன்பநிதி (30) அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் என்பவர். சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. இவ்வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தூண்டும் வகையிலும், கணவன், மனைவி உறவு முறை பற்றி ஆபாசமாகவும், மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும், பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் Instagram -ல் 82,000-க்கும் மேற்பட்ட Followers மற்றும் YouTube-ல் 1,93,000 subscribers பெற்று உள்ளதால், இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள்; மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், இதனால் இளைஞர் சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண். 32/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.)-ன் படி வழக்கு பதிவு செய்து, நேற்று (05.12.2023-ஆம் தேதி எதிரியான இன்பநிதி-யை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளார்.