Crime: கும்பலா திருடுவோம்... திருடிய பணத்தில் இந்த கோயம்புத்தூர் குடும்பம் செஞ்ச காரியம் தெரியுமா?

தாங்கள் கொள்ளையடித்த பணத்தைப் பயன்படுத்தி மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கு உல்லாசச் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டைச் சேர்ந்தவர் ராமு (60). இவரது மனைவி நாகம்மாள் (55). இவர்களது மகன் சத்யா (34). சத்யாவுக்கும் நந்தினி (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

Continues below advertisement

திருடிய நகையை உருக்கி மாற்றம்

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராமு, நாகம்மாள், சத்யா, நந்தினி ஆகிய ஒட்டுமொத்த குடும்பத்தினரும் திருடுவதை முழு நேரத் தொழிலாக கொண்டிருந்துள்ளனர். குறிப்பாக பெண்களின் நகைகளைத் திருடுவதில் நாகம்மாள் அதிக அனுபவம் பெற்றவராக வலம் வந்துள்ளார்.

திருச்சி, பாலக்காடு, மதுரை என இவர் பல இடங்களில் நாகம்மாள் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இதற்காக ஐந்து முறை சிறை சென்றும் வந்துள்ளார்.

அந்த வகையில் முன்னதாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் பெண் ஒருவரிடம் எட்டு பவுன் நகையும், கோனியம்மன் கோயில் விழாவில் 3 பேரிடம் 12 பவுன் தங்க நகை நாகம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் பறித்த நிலையில் தனிப்படை காவல் துறையினர் ராமு, நாகம்மாள். சத்யா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்

2 கோடியில் பங்களா, வெளிநாடு சுற்றுப்பயணம்

இவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகை, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமாக பாப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், திருடும் நகைகளை, பறித்த உடனேயே உருக்கி விற்பனை செய்து விடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கைதான மூன்று பேரும் அளித்த வாக்குமூலத்தில்,  தாங்கள் கொள்ளையடித்த பணத்தைப் பயன்படுத்தி மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கு உல்லாச சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருந்ததாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola