நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் பதுக்கல் மற்றும் போலி மருந்துகள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த கும்பல் ஒன்று போலி ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து அதனை விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் ஜபல்பூரில் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை அம்மாநில காவல்துறை அதிகாரிகள் கைது செய்து , அவர்களிடம் இருந்த ஆயிரக்கணக்கான போலி ரெம்டெசிவிர் மருந்துகளை கைப்பற்றியுள்ளனர் கைதானவர்கள் மீது கொலை வழக்குகளை பதிவு செய்ய வேன்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், போலி ரெம்டெசிவிர் மருந்தினை பயன்படுத்திய நோயாளிகளில் 90 சதவீதம் பேர் ,தீவிர நுரையீரல் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் போலி ரெம்டெசிவிர் பயன்படுத்தியவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.மேலும் போலி ரெம்டெசிவிர் மருந்தில் குளுக்கோஸ் மற்றும் உப்புக்கலவை இருப்பதாக தெரிவித்த காவல்துறை, தாங்கள் நிபுணர்கள் இல்லை, இதனை மருத்துவர்கள் கருத்தில் கொண்டு தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
போலி ரெம்டெசிவிர் ஆனாலும் குணமான நோயாளிகள்!
ABP NADU | 15 May 2021 12:25 PM (IST)
மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரையில் 1200 மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். அதில் இந்தூரில் 700 மருந்துகளும், ஜபல்பூரில் 500 மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போலி_ரெம்டெசிவர்
Published at: 15 May 2021 12:25 PM (IST)