வீட்டு மனைக்கு போலி பிளான் அப்ரூவல்


விழுப்புரம் : கடலுாரில் வீட்டு மனைக்கு போலி பிளான் அப்ரூவல் தயார் செய்து கொடுத்த புரோக்கர் கைது செய்யப்பட்டார். கடலுார் மஞ்சக்குப்பம் சண்முகம்பிள்ளை தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் முருகன். இவர், தனது நண்பர் நாகலிங்கம் (இறந்துவிட்டார்) என்பவருக்கு சொந்தமான வீட்டு மனைக்கு, மாநகராட்சி அப்ரூவல் பெற, கடலுார் ஆனைக்குப்பத்தை சேர்ந்த தெய்வீகன் மகன் சேதுபாரதி, (வயது 34) என்பவரை அணுகினார். சேதுபாரதி செம்மண்டலத்தில் வீடு, வாகனம் வங்கி கடன் உதவி மையம் வைத்துள்ளார். நாகலிங்கத்தின் வீட்டு மனைக்கு, போலியான அரசு முத்திரை தயார் செய்து, மனைப்பிரிவு அப்ரூவல் சான்றை சேதுபாரதி வழங்கியுள்ளார்.முருகன் பெற்ற மனைப்பிரிவை, கடலுார் மாநகராட்சியில் ஆய்வு செய்தபோது போலி என, தெரியவந்தது. இதுகுறித்து, கடலுார் மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் முரளி, கடலுார் புதுநகர் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து, போலியாக மனைப்பிரிவு அப்ரூவல் வழங்கிய புரோக்கர் சேதுபாரதியை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் முருகன் என்பவர் விழுப்புரம் சரக டிஐஜி அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், மேலும் வழக்கினை சரியாக காவல் ஆய்வாளர் விசாரணை செய்யவில்லை என புகார் அளித்தார்.


புகரில் கூறியிருப்பதவது...


கடந்த 19.06.2023 அன்று கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோசடி ஆவணம் சம்மந்தமாக புகார் மனு கொடுத்து அந்த மனுவிற்கு SPGP No:3101/2023 என்று பதியப்பட்டு கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு விசாரனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மனுவில் என்னை விசாரணை செய்து மனுதாரராகிய என் மீதே வழக்கு பதிவேன் என்று கடலூர் புதுநகர் ஆய்வாளர் திரு.குருமூர்த்தி அவர்கள் என்னை மிரட்டியதால் நான் மீண்டும் கடந்த 03.07.2023 அன்று வேறொரு புகார் மனுவை கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்து அந்த மனுவிற்கு SPGP No:3360/2023 என்று பதிவு செய்து விசாரனையை கடலூர் புதுநகர் ஆய்வாளர் அவரிகளிடமிருந்து மாற்றி கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த புகார் மனுவையும் ஆய்வாளர் திரு.குருமூர்த்தி அவர்களே விசாரணை செய்து மீண்டும் என்னை மிரட்டி எனக்கு அந்த புகார் மனுவை அளிக்க உரிமை இல்லை என்றும், புகார்தாரரான என் மீதே வழக்கு பதிவேன் என்று மிரட்டி அந்த புகார் மனுவின் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என்று என்னை வைத்தே எழுதிவாங்கிக்கொண்டு மிரட்டி அனுப்பிவைத்து விட்டார்.


இந்த மோசடி சம்மந்தமாக கடலூர் மாநகராட்சியில் இருந்து கடந்த 12.10.2023 அன்று புகாரை பெற்று அதில் என்னை விசாரனை செய்ய வேண்டும் என்று புதுநகர் காவல் நிலையத்தில் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. என்னை ஏற்கனவே மிரட்டி இந்த மோசடி சம்மந்தமாக இனி எவ்விதமான புகாரையும் அளிக்கக்கூடாது என்றும், அவ்வாறு புகார் ஏதேனும் அளித்தால் உன்மீதே வழக்கு பதிய நேரிடும் என்று கூறிவந்த நிலையில் தற்போது என்னை அடிக்கடி கைபேசியில் விசாரனைக்கு வருமாறு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் இருந்து தொந்தரவு செய்து வருகிறார்கள். இந்த மோசடி சம்மந்தமான என் புகார் மனுவின் மீது சரியான விசாரனை செய்யாமல் 3-1/2 மாதங்கள் கடந்த நிலையில் தங்களின் முயற்சியால் தற்பொழுது தான் கடந்த 12.10.2023 அன்று தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தாங்கள் கவணிக்கும் பொழுது இந்த மோசடி வழக்கை சரிவர கையாளவில்லை என்பது தங்களுக்கு தெளிவாக தெரியநேரிடும். மேலும் இந்த வழக்கை கடலூர் புதுநகர் ஆய்வாளர் திரு.குருமூர்த்தி அவர்கள் மட்டுமே சரிவர கையாளாமல் போனதற்கு காரணமாவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே என்னுடைய இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்டு இந்த மோசடியில் சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், காவல் ஆய்வாளர் திரு.குருமூர்த்தி அவர்களின் மீதும், துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த புகரில் தெரிவித்துள்ளனர்.