செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள சோத்துபாக்கம் ஓம் சக்தி நகர் 3வது தெரு , பகுதியை சேர்ந்தவர் சங்கர் ராவ். சங்கர் ராவ் சோத்துபாக்கம் பகுதியில் மரம் வேலை விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நளினி பாய் முதுகுளத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரே மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து. மூவரும் ஓம் சக்தி நகர் 3-வது தெரு பகுதியில் வசித்து வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகன், வேலைக்காக சென்றுவிட்டு வாரம் ஒரு முறை மட்டுமே  வீட்டுக்கு வருவார்.



இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவதற்காக , தமிழகம் முழுவதும் இருக்கும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பணியாற்றுவதற்காக பயிற்சி அளித்து தேர்தல், நடத்தும் பூத் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

 

இந்த வகையில் நளினி பாய் சென்னை அருகே உள்ள தாம்பரம் பகுதியில், நடைபெற்ற தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் பூத் அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணி மேற்கொண்டார்.  இவருடைய கணவர் சங்கர் ராவும் மர வேலைக்காக வழக்கம்போல் சோத்துபாக்கம் சென்றதால் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சங்கராவ் வழக்கம்போல தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



வீட்டிற்குள் நுழைந்து பார்த்தவுடன் ,bபீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த தெரியவந்தது. பள்ளியில் வேலை செய்துவிட்டு ஆசிரியர் மாலைக்குள் வீடு திரும்பி வடுவார் , ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற அவர் இன்று  வீட்டில் இருக்கமாட்டார் என்று தெரிந்துகொண்ட திருடர்கள் திட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து நளினி மற்றும் அவருடைய கணவர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தாமூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தேர்தலுக்கு சென்ற ஆசிரியர் வீட்டை திட்டமிட்டு திருடிய திருடர்கள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது