திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி பள்ளிகள் திறக்கப்படத நிலையில், பெற்றோருக்கு உதவியாக கால்நடைகளை அருகிலுள்ள ஏரி பகுதியில் தினமும் ஓட்டிச் சென்று மேய்த்து வருகிறார்


இந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சிறுமி தன்னை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அழுது கொண்டே தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,  அங்கு சிறுமியை  பரிசோதனை செய்த மருத்துவர்கள்  சிறுமியை மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.  



 


பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த  புகாரின்பேரில் ஆய்வாளர்  ராஜலட்சுமி வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் அந்த சிறுமியை மழுவங்கரணை சேர்ந்த 66 வயது முதியவரான மளிகை பொருள் வியாபாரி அப்துல் ஜலீல் மற்றும் லாரி ஓட்டுநரான அலாவுதீன் (35)  ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.


காவல்துறையினர் 66 வயது முதியவர் அப்துல் ஜலீலை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநர் அலாவுதீன் தேடிவருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் அப்துல் ஜலீல் மளிகை பொருட்களை ஊர்ஊராக கொண்டு சென்று விற்பனை செய்து வருபவர். அப்போது ஏரிக்கரையில் தனியாக மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை அவர் வியாபராத்துக்கு செல்லும் வழியில் பார்த்துள்ளார்.  மேலும் சிறுமி தினமும் தனியாக மாடு மேய்த்து   வருவதை கண்காணித்து வந்துள்ளார் மளிகை பொருள் செய்யும் வியாபாரி  இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  



அப்போது சிறுமியிடம் இதைப்பற்றி உங்கள் பெற்றோர்களிடமும் அல்லது வெளியில் சொன்னால் என்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதேபோல சிறுமி தனியாக மாடுகள் மேய்பதை கண்ட அலாவுதீனும் அந்த சிறுமியிடம்  வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு நாட்களில் சிறுமி தனியாக இருந்ததை கண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


இதில் அப்துல் ஜலீல் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றொருவர் அலாவுதீன்னை தேடி வருகிறோம் கூறினர்.  பெண் குழந்தைகளை வெளியே அனுப்பும்போது பெற்றோர்கள்  கண்காணிக்க வேண்டும் அன்றாட நிகழ்வுகளை பெற்றோரிடம் தெரிவிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும் என்றனர்.