சோமாஸ்கந்த முறைகேடு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் இந்த சிலையில் ஏற்பட்ட சேதம் காரணமாக வேறு ஒரு தங்க சிலையை முத்தையா ஸ்தபதி வடித்து இருந்தார். இதற்காக 100 கிலோ தங்கம், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய சிலையில் துளி அளவு கூட தங்கம் இல்லை என அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் கடந்த 2017-ல் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
மாற்றப்பட்ட வழக்கு
பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அறநிலையத் துறையின் அப்போதைய ஆணையர் வீரசண்முகமணி, திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டு, பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீது நம்பிக்கை வைத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஒப்படைத்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4 ஆண்டுகளாக நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததைத்தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின் ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உடனடியாக சிவகாஞ்சி போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் 90 நாட்களுக்குள் விசாரணையை முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்
தொடர்ந்து கால தாமதம்
இதுகுறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை என , கூறுகிறார் சமூக ஆர்வலர் டில்லிபாபு. இதுகுறித்து அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரைக் காப்பாற்றுவதற்காக இது போன்ற காலதாமதம் ஏற்படுகிறது என டில்லிபாபு கேள்வி கேள்வி எழுப்புகிறார்.
திட்டமிட்டு மிரட்டுவதாக புகார்
இதுகுறித்து புகார் அளித்து வழக்கு நடத்திவரும் அண்ணாமலை கூறுகையில், இந்த தங்கம் முறைகேடு வழக்கையும், தொன்மையான உற்சவரை கடத்த முயற்சி செய்தது மேலும் திருக்கோவிலில், பல உற்சவர்களை கடத்தியதும் பல கிலோ தங்கம் வெள்ளி திருவாபரணங்கள் திருடுபோனது என அனைத்து குற்றச்சாட்டுகளையும், மூடி மறைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போலிசாருக்கு லஞ்சம் கொடுத்து, மனுதாரர்கள் ஆகிய எங்கள் மீது தொடர்ந்து, முன்று பொய்யான புகாரை பதிவு செய்து சரித்திர பதிவேடு குற்றவாளியாக சித்தரித்தும், எங்கள் குடும்பத்தை போலிசார் சித்திரவதை செய்து வருகின்றனர் . நாங்கள் மேற்கொண்ட வழக்கில் எந்த ஆதாரம் கொடுக்க கூடாது என்றும், சாட்சி சொல்ல கூடாது என்றும் ஆய்வாளர் சிவகுமார் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களை காவல் நிலையத்தில் வைத்து எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறார் அண்ணாமலை.