சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்து கொங்கணாபுரம் தானமூர்த்தியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி தைலம்மாள். இவருக்கு வயது 75. இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள்.


கணவன் இறந்த பிறகு தைலம்மாள் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வீட்டின் அருகிலே அவரது மகன்கள் வீடு இருந்துள்ளது. தைலம்மாள் வீட்டின் அருகிலே அவரது கடைசி மகன் மெய்வேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.




மெய்வேலின் மனைவி செல்வி. அவருக்கு வயது 43. மெய்வேலின் மனைவி செல்விக்கும், தைலம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருந்தது. மாமியார் – மருமகள் இடையே தண்ணீர் பிடிப்பதில் இருந்து பல்வேறு விஷயங்கள் காரணமாக தொடர்ந்து வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையிலும் மாமியாருக்கம், மருமகளுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனால், ஆத்திரமடைந்த செல்வி தனது மாமியார் தைலம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தைலம்மாளும் ஆத்திரத்தில் மருமகள் செல்வியிடம் பேசியுள்ளார். பின்னர், மாமியார் தைலம்மாள் வீட்டுக்கு சென்ற மருமகள் செல்வி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த செல்வி மாமியார் என்றும் பாராமல் அருகே இருந்த மண்வெட்டிக்கு பயன்படுத்தும் கட்டையை எடுத்து தைலம்மாள் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.





இதனால், தைலம்மாள் தலையில் இருந்த ரத்தம் கொட்டியது. இதனால், வலி தாங்க முடியாத தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மெய்வேல் உடனடியாக தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.


தனது மாமியார் உயிரிழந்த தகவல் அறிந்த செல்வி மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளார். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டின் உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


தண்ணீர் பிடிக்கும் தகராறில் மாமியாரை மருமகளே கட்டையால் அடித்துக் கொலைசெய்ததும், பின்னர் அவர் போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண