'ஜாக்குலினை தொடர்ந்து பண மோசடி வழக்கில் நோரா ஃபதேஹி'... என்ன நடக்கிறது பாலிவுட்டில்!

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை தொடர்ந்து பண மோசடி வழக்கில் மற்றொரு பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹியும் சிக்கியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பதியுள்ளது.

Continues below advertisement

பாலிவுட் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவதும் விசாரணைக்கு அழைக்கப்படுவதும் ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் குறித்த மிகவும் மோசமான மனநிலை உருவாக காரணமாகி உள்ளது. சமீபத்தில் ஷாருக் மகன் போதை பொருள் வழக்கு, ஷில்பா ஷெட்டி கணவர் ஆபாச பட வழக்கு, அதற்கு முன் பல முன்னணி நடிகர்களின் போதை பொருள் வழக்கு என்று பாலிவுட் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை விட வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது பண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகியை ஆஜராக அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறையினர் 200 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாக்குலினை தொடர்ந்து இன்னொரு பிரபல பாலிவுட் நடிகை ஆன நோராவும் இதே விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

Continues below advertisement

பண மோசடி விவகாரம் மற்றும் குற்ற வழக்குகளில் 17 வயதில் இருந்தே ஈடுபட்டு வரும் மோசடி உலகின் கிங் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான சொந்தமான கடற்கரை பங்களா, 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மற்றும் 82 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை சென்னையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது கைப்பற்றப்பட்டது. சுகேஷ் சந்திராவுடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகைகளிடமும் போலீசார் விசாரணையை முடுக்கியதில் பிரபல பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை தொடர்ந்து நோராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த அவருக்கு அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் மேலும் குற்றவழக்குகளில் பல நடிகர் நடிகைகள் பெயர் புலப்படுவதை தொடர்ந்து நோராவின் பெயரும் இணைந்துள்ளது பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது.

நோரா ஃபதேஹி சத்யமேவ ஜயதே படத்தில் இடம்பெற்ற தில்பார் குத்து பாடல் மூலம் பிரபலமானவர். ராக்கி ஹேண்ட்ஸம், ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி, ஸ்த்ரீ, மர்ஜவான் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி பாலிவுட்டின் கிளாமர் குயினாக கலக்கி வருகிறார் நோரா ஃபதேஹி. இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9ல் போட்டியாளராக கலந்து கொண்ட நோரா ஃபதேஹி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் தற்போது இந்த வழக்கிற்கான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது அவருடைய ரசிகர்களை அதிருப்தி படுத்தி உள்ளது. இதுபோல தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் குற்ற வழக்குகளில் கைதாவதும் விசாரிக்கப்படுவதும் ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் மீதே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement