ஒடிசாவில் அமைந்துள்ளது ஜஜ்பூர் மாவட்டம். அங்குள்ள ரௌதரபுரில் வசித்து வருபவர் பிபுதி சமல் என்ற மன்டு. இவருக்கு மதுப்பழக்கம் அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது. மது குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினருடன் அவ்வப்போது இவர் தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.


போதையில் தகராறு:


இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு வழக்கம்போல பிபுதி சமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது அண்டை வீட்டாருடன் பிபுதி சமல் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால், தெரு முழுக்க மக்கள் கூடியுள்ளனர்.


தனது மகன் போதையில் பக்கத்துவீட்டுக்காரர்களுடன் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வீட்டின் உள்ளே இருந்த அவரது தந்தை சத்ருகன் பார்த்துள்ளார். இதனால், அவர் உடனடியாக வீட்டின் வெளியே வந்து பிபுதி சமலை கண்டித்துள்ளார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


தந்தையின் மூக்கை கடித்த மகன்:


அப்போது, போதையில் ஆத்திரம் தலைக்கேறிய பிபுதி சமல் தந்தை என்றும் பாராமல் சத்ருகனின் மூக்கை கடித்துள்ளார். மேலும், அவரது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். சத்ருகனை அவரது மகன் பிபுதி தாக்குதவதை கண்ட அக்கம்பக்கத்தினர் 2 பேர் பிபுதியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது, அறிவுரை கூறிய இரண்டு பேரையும் பிபுதி தாக்கியுள்ளார்.


இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிபுதியை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைக்கேறிய போதையால் பெற்ற மகனே தந்தையிடம் சண்டையிட்டு அவரது மூக்கை கடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே மதுபோதை தலைக்கேறிய காரணத்தால் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க: Zomato: 10 கோடி முறை ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணி! 3,580 முறை ஆர்டர் செய்த மும்பைவாசி - 2023ல் ஜோமோட்டா டேட்டா இதுதான்!


மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!