உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை வாலிபர் ஒருவர் கொலை செய்து உடலை சோபாவிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் மும்பையில் நிகழ்ந்தேறி உள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சேர்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே. கடந்த 15-ந்தேதி இவரது வீட்டு சோஃபாவிற்குள் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இருந்த அவரை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கொலை செய்ய வந்தவனே வீட்டின் வெளியே காலனியை மறந்து விட்டு சென்றிருக்கிறான். சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணி இருந்ததை போலீசார் கண்டனர்.



இது பற்றி சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் அவருக்கு இந்த காலணியை பார்த்த ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டிருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரின் நண்பரான நவிமும்பையை சேர்ந்த விஷால் தாவார் என்பவரின் காலணிதான் அது என தெரியவந்தது. ஏனெனில் 2 பேரும் சமீபத்தில்தான் கடைக்கு சென்று ஒரே மாதிரி காலணிகளை வாங்கி உள்ளனர். அவரே கொன்றுவிட்டு எளிதாக போலீசாருக்கு ரூட்டும் போட்டுக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் 28 வயதாகும் விஷால் தவாரை பிடித்து விசாரித்துள்ளனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு, அவர் தான் சுப்ரியா ஷிண்டேவை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.



இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- "சுப்ரியா ஷிண்டே கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த அன்று சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்று இருக்கிறார். அவரது மகன் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். வீட்டில் தனிமையாக இருந்த சுப்ரியா ஷிண்டேவை சந்திக்க விஷால் தாவார் வந்துள்ளார். அங்கு அவரிடம் உல்லாசமாக இருக்க வருமாறு கேட்டுள்ளார், இதனை கேட்ட சுப்ரியா ஷிண்டே மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். கயிறு இறுக்கியதில் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே அப்படியே உயிரிழந்துள்ளார். சுப்ரியா ஷிண்டே இறந்து விட்டதால், உடலை யாரும் காணாமல் மறைக்க இடம் தேடியுள்ளார். கடைசியில் ஷோஃபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது.


மாலை வீடு திரும்பிய கணவரும், மகனும் சுப்ரியாவை தேடியுள்ளார், எங்கு தேடியும் கிடைக்காததால் எங்களிடம் புகார் அளித்தார். நாங்கள் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியதில் சோஃபாவிற்கு அடியில் உடல் கிடைத்தது. தப்பி ஓடும்போது பதற்றத்தில் தனது செருப்பை போடாமல் மறந்துவிட்டு சென்றுள்ளார்." என்று கூறியுள்ளனர்.