Crime: டெல்லியில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்கு வந்த நோயாளி,  மருத்துவரை ஸ்க்ரூடிரைவரால் குத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நோயாளி வெறிச்செயல்:


டெல்லி சப்தர்ஜங் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மருத்துவமனையில் நேற்று 1 மணியளவில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நேற்று பகல் 1 மணிக்கு சிகிச்சைக்காக ஒருவர் வந்திருந்தார். அப்போது, அவருக்கான சிகிச்சை ஒரு மணி நேரத்தில் முடிந்தது. பின்பு, அவர் கையில் டிரிப்ஸ் போட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஒரு மருத்துவரை எடுக்கச் சொன்னார். அப்போது, நோயாளி அவரை மிரட்டியுள்ளார். 'நான் உன்னை இன்று கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டியிருக்கிறார்.


இதனால் மருத்துவர் அருகில் நர்ஸ் ஒருவரை அழைத்து டிரப்ஸ் அகற்றுமாறு கூறியிருக்கிறார். அந்த நேரத்தில், நோயாளி தனது சட்டை பையில் இருந்த ஸ்க்ரூடிரைவரை எடுத்து அவரை தாக்கி உள்ளார். அவரின் கை, வயிற்றில் ஸ்க்ரூடிரைவரால் குத்தியிருக்கிறார். 


இதனால் மருத்துவரின் இடதுகையில் ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. படுகாயம் அடைந்த மருத்துவமரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சை அனுமதித்தனர். பின்பு, இந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மருத்துவர் 26 வயதான ராகுல் கலேவா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடரும் அட்டகாசம்:


முன்னதாக,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கேரளா மாநிலம் கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் பெண் மருத்துவர் வந்தனா (25) பணியில் இருந்திருக்கிறார். அப்போது, சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி சந்தீப் (45) என்பவர் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்திரிக்கோல் பயன்படுத்தி பலமுறை குத்தி உள்ளார். இதனை பார்த்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்தார். அப்போது, சந்தீப் தாக்குதல் நடடத்தியதில் 5 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையில், மருத்துவர் வந்தனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க