கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள முனியநாதபுரம் பகுதி சேர்ந்தவர் மனோகரன் திமுக மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்தார். மேலும் இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடையில் நடத்தி வந்தார். இந்நிலையில் மனோகரன் தனது மோட்டார் சைக்கிளில் புகலூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து, பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை.
அரவாக்குறிச்சி அருகே பெண் ஒருவர் கிணற்றிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒத்தையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி சுப்புலட்சுமி 40 இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்தார் இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்த சுப்புலட்சுமி வீட்டுக்கு அருகில் உள்ள விவசாயி கண்ணில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
மது, கள் விற்ற 15 பேர் கைது.
கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் தோகைமலை குழுத்தலை வேலாயுதம்பாளையம் வெள்ளியணை வாங்கல் வெங்கமேடு கா பரமத்தி மாயனூர் பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சட்டவிரோதமாக தங்கதுரை பால்பாண்டி கார்த்தி முருகன் காமராஜ் பாலகிருஷ்ணன் கல் மது விற்றதாக செந்தில் குமார் ஆகியோரை 15 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 95 மது பாட்டில்கள் 5 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஹோட்டலில் திடீர் தீ விபத்து.
கரூர்- கோவை சாலையில் பிரபல தனியார் ஹோட்டல் செயல்படுகிறது. அங்கு காலை சிற்றுண்டி தயார் செய்யும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சமையல் அறையில் குதித்துக் கொண்டிருந்த எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறந்தாங்க கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதனால், கரூர் கோவை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.