கொரோனா வைரஸ் நோயின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் பரவிவருகிறது. இந்நோய் பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும்பொருட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை செய்ததிலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த நபர்களின் மீதும் இன்று(04.06.2021) மட்டும் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகையாக 23400 ரூபாயும், பொது இடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்கள் மீது சுமார் 15 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதத்தொகையாக 7500 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 74 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.




தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேண்டி அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 04ந் தேதி வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது சுமார் 10089 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக 2017800 ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் மீது 865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக  432500 ரூபாயும், விதிமுறைகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது சுமார் 2,639 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 




ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்று (04.06.2021) எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 38 மதுபான பாட்டில்களும், 187 கர்நாடக மாநில மதுபான பாட்டில்களும், மேலும் தென்னங்கள் 1.5 லிட்டர், கள்ளசாராயம் 11 லிட்டர், 200 லிட்டர் சாராயம் மற்றும் கர்நாடக மதுபான பாட்டில்களை கடத்தி வந்த லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


மேலும், கடந்த மே 10ம் தேதி முதல் ஜூன் 04ந் தேதி வரை 181 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்குகளில் 195 நபர்களை கைது செய்தும், 7456 மதுபான பாட்டில்களும், 730 லிட்டர் சாராய ஊரல், 26.5 லிட்டர் கள்ளசராயமும், 11 இருசக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நோய்பரவலை கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அரசு விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலங்களில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங் சாய் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.