வேடசந்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் பேருந்தில் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 



 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக எரியோடு அருகே உள்ள காலகவுண்டன் பட்டியை சேர்ந்த வீரகுமாரை அனுமதித்திருந்தனர்.  வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்த அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டது. உடனே அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனை செல்ல முடிவு செய்தனர். 

அவருக்கு துணையாக அவரின் உறவினர்கள்  பழனிசாமி உட்பட 2 பேர்  ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டனர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையை நோக்கி 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்த போது சத்திரபட்டி என்னுமிடத்தை நெருங்கியது. 

அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, சாலை ஓரத்தில்  நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த108 ஆம்புலன்ஸ் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்புறம்  பயங்கரமாக மோதியது. இதில் 108 ஆம்புலன்ஸ்  வாகனத்தில் பயணித்த பழனிச்சாமி மற்றும் நோயாளி வீரகுமார்  இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 




மேலும் 108 வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவ உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணித்த 7 பேர்  படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில்,  தற்போது இந்த சம்பவம்  குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.





அதில் பரபரப்பான நான்கு வழிச்சாலையில் தனியார் பேருந்து வந்து நிற்பதும், அதன் பின் கண் இமைக்கும் நேரத்தில் 108 ஆம்புல்ன்ஸ் மோதி விபத்துக்கு உள்ளாவதும் பதிவாகியுள்ளது. மோதிய வேகத்தில் ஆம்புல்ன்ஸ் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கி போனதும், அதில் முன் பக்கம் இருந்தவர்கள் நசுங்கி போன அதிர்ச்சி காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. 

சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட வாகன போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.