ஓட்டுப்போட வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். கேபிள் ஆபரேட்டராக வேலைபார்த்து வரும் இவருக்கு நிவேதா (22) என்ற பெண்ணும், சபரி (17) என்ற பையனும் உள்ளனர்.  மகள் நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில்  எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். மகன் சபரி பிளஸ் 2 படித்து வருகிறார்.  


வாக்களிக்க வருகை..


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து வாக்களிப்பதற்காக நிவேதா, கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று மாலை தந்தை பால்ராஜும், அவரது மனைவி அகிலாவும் வெளியே சென்றுள்ளனர். வீட்டில் நிவேதாவும் அவரது தம்பி சபரியும் மட்டுமே இருந்துள்ளனர்.




அப்போது குளியல் அறைக்குச் சென்றுள்ளார். நிவேதா நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளார். அப்போது குளியல் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு ஓடிச்சென்று சபரி பார்த்த போது ரத்த வெள்ளத்தில் நிவேதா சரிந்து கிடந்துள்ளார். கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் உயிருக்கு போராடியுள்ளார் நிவேதா. இது குறித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார் சபரி.


உயிரிழப்பு...


உடனடியாக வீட்டுக்கு ஓடி வந்த பெற்றோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிவேதாவை சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனிறி நிவேதா உயிரிழந்தார்.  இது குறித்து கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீசார் நிவேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு  வந்த மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டது ஏன்? வீட்டுப்பிரச்னையா? கல்லூரியில் ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண