கோவை காதல் ஜோடி விஷயத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது 


கோவை காதல் ஜோடி விஷயத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இருவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது  செய்யப்பட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது 22). இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். அதை பெற்றோர் எதிர்த்ததால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவியாக 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் உடன் வந்தனர்.


School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!


இவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த சிலரின் உதவியுடன் மொட்டணம்பட்டி எம்.ஜி.ஆர்.நகரில் பதுங்கி இருந்தனர். மேலும் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே காதல் ஜோடியின் இருப்பிடத்தை அறிந்து துடியலூர் போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து வந்தனர்.




சிறுமிக்கு பாலியல் தொல்லை


ஆனால், போலீசார் வருவதை அறிந்த காதல் ஜோடி தப்பிவிட்டது. அதேநேரம் காதல் ஜோடிக்கு உதவிய மற்றொரு சிறுமி மற்றுமு் சிறுவன் உள்பட 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.


விசாரணையில் சிறுமியுடன் சிக்கிய பேகம்பூர் பகுதியை சேர்ந்த முகமதுஅலிஜின்னா (26), ஆர்.வி.நகரை சேர்ந்த அலெக்சாண்டர் (22) ஆகியோர், தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய கோகுலை தேடி வருகின்றனர். சிறுமிகளை கடத்தி வந்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நெட்வொர்க் இவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமின்றி சிறுமிகளை கஞ்சா உள்ளிட்ட விற்பனைக்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்ததும் தெரியவந்துள்ளது. சிறுமிகளை குறிவைத்து குற்றச்செயல்களை நகர்த்தி வந்த இந்த கும்பலில் முக்கிய தலைகள் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என தெரிகிறது. 


கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து சிறுமிகளை காதலித்து ஏமாற்றி அழைத்து வந்து,அவர்களை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதும், பின்னர் அதையே தொழிலாக மாற்றுவதும் இவர்களின் நோக்கமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். தப்பியோடிய கோகுலை விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். 


 


ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!