திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் சக்திவேல் வசித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது வீட்டில் மனைவி உட்பட 4 பேருடன் உறங்கி கொண்டுள்ளார்.
அப்பொழுது, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி வீட்டில் இருந்த மருத்துவர் உட்பட நான்கு பேரை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், வீட்டில் பீரோவில் இருந்த 280 பவுன் தங்க நகைகள், ரூ 25 இலட்சம் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். மேலும், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இனோவாகாரையும் அந்த முகமூடி கும்பல் எடுத்து சென்றுள்ளது.
இதையடுத்து, டாக்டர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எஸ்பி சீனிவாசன் மற்றும் டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடித்து சென்றவர்களை வடமாநிலத்தவரா என்ற கோணத்தில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் வீட்டில் 280 பவுன் நகை பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்