திண்டுக்கல்லில் பயங்கரம்... திமுக ஒன்றிய நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை

திமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடல் வைக்கப்பட்ட வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு மாசியின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை குற்ற சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக  நெல்லை திண்டுக்கள், உட்பட தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது  குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையcகொலையாளிகள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  குறிப்பாக அவரது முகத்தை குறிவைத்து கொலை கும்பல் சிதைத்து கொலை செய்தது. தற்போது அதேபோல ஒரு கொலை சம்பவம் திண்டுக்கல்லில்cஅரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் வெட்டியதை தடுக்க முயன்ற போது அவரது கை துண்டானது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் தி.மு.க வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மாசி பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.


இதனையடுத்து மாசி இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று தலை கழுத்து கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மாசியின் ஒரு கை துண்டாகி தனியே விழுந்தது. இதில் மாசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு மாசியின் உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு திமுகவினரும், குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூடுதலாக போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேரம் நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி, மாசியின் உடல் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு சற்றே பரபரப்பு குறைந்தது. திமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola