பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்


டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று மோடியை சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள நிதியை வழங்க வலியுறுத்த உள்ளார்.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்


கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை TIDCO தொடங்கியது. பயிற்ச் நிறுவனம் அமைக்க ஆப்ரேட்டரை தேர்வு செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட நிலையில் திட்ட அறிக்கை தயாரிக்க தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் அருகே பரபரப்பு


கேரளாவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி, வரும் வழியெல்லாம் விபத்தை ஏற்பத்திக்கொண்டு நிற்காமல் செல்ல, போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டி நிறுத்தினர். லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை


விருதுநகர் அருகே விபத்து - 4 பேர் பலி


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீதர், நிதிஷ்குமார், வாசு மற்றும் சதீஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக போலீசார் முதல்கட்ட தகவல். 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.


தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் விலை ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,100-ஆக விற்பனையாகிறது.


வளர்ந்த நாடாக இந்தியா இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்


7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அடைந்தால், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை முந்தி விடலாம். எனவே, பொருளாதாரத்தில் 3-வது இடத்தை அடைவது சாத்தியம்தான். ஆனால், வளர்ந்த நாடு ஆவதற்கு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக, உற்பத்தியை பெருக்குவதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அவசியம். வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். வரி அதிகாரிகளின் சோதனை குறித்த அச்சத்தை போக்க வேண்டும். - ரகுராம் ராஜன்


இணையதள பக்கங்கள் முடக்கம்


ஆதார், பான் கார்ட் விவரங்கள் கசியும் ஆபத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள, இணையதள பக்கங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இணையதளங்கள் மீது மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது,


இந்திய அணி பவுலிங்


வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு. மழை காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


ஐபிஎல் கொல்கத்தா அணியின் ஆலோசகர் நியமனம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக பிராவோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் வீரராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த பிராவோ தற்போது கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார்.