தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மடதள்ளி கிராமத்தைச் சார்ந்த அதியமான் என்பவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பொழுது மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளின், உறவினர்களோடு நன்றாக பேசி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு மருத்துவத் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் தெரியும் அவர்களின் மூலமாக அரசு வேலைகள் வாங்கித் தர முடியும் என ஆசிவத்தை கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ராணுவ வீரர் சமதர்மன் என்பவர் மனைவி அகிலா, தந்தையின் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பொழுது அவரிடம், அதியமான் மருத்துவமனையில் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அப்பொழுது போன் நம்பரை வாங்கிக் கொண்டு அடிக்கடி பேசியதில், இருவருக்குள் பழக்கமானது.
இதில் அதியமான், சமதர்மன் மனைவி அகிலாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி, வெளியூர் செல்வது, தனித்தனியாக சந்தித்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு வேலை வாங்கி தருவாராக, அகிலாவிடம் ரூ.7 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் அகிலா உறவினர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு ஆள் தேவைப்படுவதாகவும் கூறி, நான்கு லட்சம் பணம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து பணி நியமன ஆணை போலியான தெரியவந்ததும் அகிலாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை அடுத்த அகிலா தனது பிள்ளைளுடன் அதியமானுடன் சென்றுள்ளார். இந்நிலையில் அகிலா மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று திருப்பூரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை அதியமான் கடத்திச் சென்றதாக ராணுவ வீரர் சமதர்மன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதியமான் ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து திருப்பூர் சென்ற பாப்பாரப்பட்டி காவல் துறையினர் அதியமான் மற்றும் அகிலா, கழந்தைகளை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதியமான் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் மருத்துவ உதவி செய்வதாக ஆசை வார்த்தை கூறி, செல்போன் நம்பரை கொடுத்து அடிக்கடி பேசுவதும், மருத்துவமனைக்கு விபத்தில் காயமடைந்து ஆபத்தான சூழலில் வரும் பொதுமக்களிடம், இந்த மருத்துவமனையில் இருந்தால் உயிர்பிழைக்க முடியாது. சேலம் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி, தனியார் மருத்துவமனையில் கமிஷன் வாங்கியதும் தெரிய வந்தது.
மேலும் போலியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு பணி நியமன ஆணை தயாரித்துக் கொடுத்ததும் தெரிய வந்தது. அதேபோல் பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது இதனை எடுத்து அதியமானை பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரியும் அதியமான் ஏற்கனவே இரண்டு திருமணம் ஆன நிலையில் மேலும் ஒரு பெண்ணை தனியாக வீடு எடுத்து வைத்திருந்ததும், பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்து போலியாக பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்து சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.