தருமபுரி அருகே குடிசை வீடு ஒன்றில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்த போதை ஊசிகளை, மருந்து கட்டுபாட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்தனர்- பதுக்கி வைத்த 4 பேரை அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை. 

 

தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து தருமபுரி சரக மருந்தக ஆய்வாளர் சந்திராமேரி தலைமையிலான அதிகாரிகள், நகர காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில்   கோம்பேரி கிராமத்தில் சோதனை செய்தனர. அப்பொழுது சேர்ந்த வஜ்ரவேல்(47) என்பவர் போதைக்காக ஊசியை பயன்படுத்துவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கோம்பேரி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தருமபுரி நகரில் உள்ள ஒரு மருந்தகத்தின் உரிமையாளர் மோசசுந்தரம் என்பவரிடம் போதை ஊசி வாங்கியது தெரியவந்தது.  தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெங்கரு பகுதியில் இருந்து காமராஜ் என்பவர் வாங்கி வந்து தருமபுரி நகரில் புழகத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 



 

மேலும் சாமிசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மூலம், ஏலகிரி கிராமத்திலுள்ள நண்பர் ஒருவரது குடிசை வீட்டில் போதை ஊசிகள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருப்பதை மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குடிசை வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை ஊசிகளை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போதை ஊசி பதுக்கி வைத்தது தொடர்பாக வஜ்ஜிரவேல், காமராஜ், முருகேசன், சோமசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரிடமும் அதியமான் கோட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக ஊசி பயன்படுத்தி வந்ததது கண்டுபிடிக்கபட்டுள்ள சம்பவம் தருமபுரியில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடல் வலி நிவாரணிக்கு மருத்துவர்களால் பரிந்துரைத்த பிறகே பயன்படுத்தக் கூடிய குறிப்பிட்ட ஊசியினை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 



 


 

தருமபுரி குமாரசாமிபேட்டையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிக்கும் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள். 

 



 

தருமபுரி குமாரசாமிபேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் குயிலன் மனைவி லதா(48). நேற்று ஃ மாலை 7 மணியளவில் குமாரசாமிபேட்டை தட்சிணாமூர்த்தி தெருவில் மடம் அருகே பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிராக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது லதா கீழே விழுந்தார்.  ஆனால் அவர் கழுத்தில் இருந்த செயினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் பறிக்க முடியவில்லை. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து அதிவேகமாக பைக்கில் தப்பித்தனர். இந்நிலையில் லதா கீழே  விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் லதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து தருமபுரி நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.