தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரானா தொற்றின்  தாக்கம் அதிகமாக இருந்ததால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்தது. இந்த நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், போன்ற அனைத்து விதமான கடைகளையும் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மதுபான ஆலைகள், கடைகள்  திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் என  சொல்லக்கூடிய திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை படுவேகமாக நடைபெற்று வருகிறது. 




கடந்த ஒரு ஆண்டுகளாக அதிக அளவில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசி பழக்கங்கள் டெல்டா மாவட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது என திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, இந்த டெல்டா பகுதிகளுக்கு வரும் போதைப்பொருள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருவதாகவும் அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து எடுத்து செல்லப்படுகிறது அதை சிலர் தங்களது இல்லத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.


சிலர் கடைகளில்  வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறை அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார். மேலும் தினமும் டெல்டா மாவட்டங்களில் குறைந்தது 5 கிலோ முதல் 10 கிலோ வரை கஞ்சா போன்ற  போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். விற்பனை செய்தவர்களின்  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி ராம்ஜி நகர், திருவாரூர், நாகை போன்ற இடங்களில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை போதைக்கு அடிமையாகிய இளைஞர்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களை அழைத்து போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களிலும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 


மேலும் ”முதல்கட்டமாக திருச்சி மத்திய மண்டலத்தில் உட்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், பயில்கின்ற மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் ஆகியோர் புகையிலை பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிறு வணிகத்தில் ஈடுபடும் பெட்டி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்களது கடைகளில் சிகரெட், புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை செய்தால்  தடுப்பு சட்டம் பிரிவின்படி கல்வி நிறுவனங்களின் அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் செயல்படும் சிறு பெட்டி கடைகள் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிகரெட், குட்கா, பான்பராக் மற்றும் இதர போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. குறிப்பாக  18 வயதுக்கு குறைவான உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தால்  குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி பிணையில் வர முடியாத படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் செலுத்த உட்படுத்தப்படுவார்கள்” என மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ”போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை அவர்களின்  பெற்றோர்கள் தான் முக்கிய பங்கெடுத்துக் தடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு அறிவுரைகள் கூறி, பழக்கவழக்கங்களையும்,  நண்பர்களின்  சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதையும் நன்கு அறிந்து அவர்களுக்கு அவ்வப்போது பெற்றோர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்” என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.