சமீப காலங்களாக சில தம்பதிகளுக்கு திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு அந்தப் பிரச்னை கொலை செய்யும் அளவிற்கும் வெடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு திருமணத்தை மீறிய பந்தம் இருக்கும் போது கொலை சம்பவம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 21 வயது கணவரை தன்னுடைய மனைவி திட்டம் தீட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புதுவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கும் முனிஷ் (21) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தச் சூழலில் கட்டிட தொழிலாளியான முனிஷ் கடந்த 8ஆம் தேதி டெல்லியில் தான் வேலை செய்த இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றிய டெல்லி காவல்துறையினர் உடற் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் முனிஷ் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சந்தேக மரணத்தில் இருந்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொலை நடப்பதற்கு முந்தைய நாளை இரவு முனிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் வேலையை முடித்துவிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் முனிஷ் முதல் தளத்திலும் ராஜேஷ் அதற்கு அடுத்த தளத்திலும் தூங்கியதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடந்து ராஜேஷை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வந்துள்ளனர். அதேசமயம் மற்றொரு பிரிவு காவல்துறையினர் உத்தரபிரதேசத்தில் உள்ள முனிஷின் மனைவியை விசாரிக்க சென்றுள்ளனர்.
அங்கு முனிஷின் மனைவி புரி தேவி மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தினேஷை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து முனிஷ் மற்றும் அவருடைய தந்தை தினேஷை திட்டி எச்சரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து புரி தேவி மற்றும் தினேஷ் சேர்ந்து முனிஷை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இவர்களுக்கு முனிஷ் உடன் பணி புரிந்த ராஜேஷ் உதவி உள்ளதாக தெரிகிறது. அதன்படி செப்டம்பர் 7ஆம் தேதி இரவு தினேஷ் டெல்லிக்கு சென்று ராஜேஷ் உதவியுடன் முனிஷை கொலை செய்து தப்பி வந்ததாக அவர் காவல்துறையினர் ஒப்பு கொண்டுள்ளார். இதனால் முனிஷின் மனைவி புரி தேவி மற்றும் காதலர் தினேஷ் கொலைக்கு உதவியாக இருந்த ராஜேஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 21 வயதான கணவரை காதலருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை